உலகம்
Typography

மத்திய கிழக்கில் போர்ப் பதற்ற விவகாரத்தில் அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது ஈரான் மீது போர் தொடுக்க, அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை, செனட் சபை இரண்டிலும் டிரம்பின் சொந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்ப்புத் தெரிவித்து இருப்பதாலும், இந்த வருட இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தலை டிரம்ப் எதிர்கொள்ள போர் சூழலைத் தவிர்க்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முற்றுகைப் போக்கை கைவிட வேண்டி ஏற்பட்டுள்ளது.

இதை விட அமெரிக்க டிரோன் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் படைத் தளபதி சுலைமானியின் சடங்கில் பல இலட்சக் கணக்கான ஈரானிய மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை அரசுக்குத் தெரிவித்திருந்ததும் ஈரான் மீதான அமெரிக்காவின் உடனடிப் போர் முனைப்பை இல்லாது செய்துள்ளது. இந்நிலையில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு நிமித்தம் ஈரானுடன் எந்தவித முன் நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஐ.நா இற்கான அமெரிக்கத் தூதர் கெல்லி கிராஃப்ட் தெரிவித்துள்ளார். எந்தவொரு நாடும் ஐ.நா சாசனத்தின் 51 ஆவது பிரிவின் படி தற்காப்பு நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி இருப்பதாகவும், தற்காப்புக்காகவே சுலைமானியைக் கொன்றதாகவும் ஐ.நா சபைக்கு அமெரிக்கா கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

இதேவேளை புதன்கிழமை ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருக்கும், இர்பில், அல் அசாத் ஆகிய பகுதிகளில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் ஈரான் இந்த இடங்களைத் தாக்கவுள்ளது என ஈராக் அமெரிக்காவுக்கு உளவுத் தகவல்களைத் தந்ததால் அமெரிக்கத் துருப்புக்கள் உயிராபத்து இன்றித் தப்பித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் அமெரிக்கத் துருப்புக்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலும் தற்காப்பு நிமித்தம் தான் என ஐ.நாவுக்கான ஈரான் தூதர் மஜித் தெரிவித்துள்ளார். இது தவிர ஐ.நா சபைக்கு ஈரான் எழுதியுள்ள மற்றுமொரு கடிதத்தில் தாமும் போரையோ, நிலமை மோசமடைவதையோ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்