உலகம்
Typography

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தமது நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் உறுதி செய்ய தாக்குதல் போக்கு அவசியம் என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.

சமீப காலத்தில் வடகொரிய மற்றும் அமெரிக்க அதிபர்கள் இருமுறை நேரில் சந்தித்துப் பேசியும், பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றகரமான உடன்பாடும் எட்டப் படவில்லை. இதையடுத்து வடகொரியா மீண்டும் தனது அணுவாயுத, ஏவுகணை சோதனைகளை ஆரம்பித்திருப்பது சர்வதேச அளவில் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் தன் கட்சித் தலைவர்களுடன் அதிபர் கிம் திடீர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி கலந்துரையாடியுள்ளார். இதன் போதே கிம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய நேர்மறையான தாக்குதல் போக்கு அவசியம் என்பதை வலியுறுத்தியதாகத் தெரிய வருகின்றது.

கடந்த வருடம் கிம் தனது விசேட புத்தாண்டு அறிவிப்பின் போது அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் இம்முறையும் புத்தாண்டு அறிவிப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் அணுவாயுத விவகாரம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்