உலகம்
Typography

உலகில் முதலில் புத்தாண்டு விடியும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில் தற்போது புத்தாண்டு விடிந்துள்ளது.

இதை முன்னிட்டு அங்கு வண்ண மயமான வான வேடிக்கைகளுடன் பொது மக்கள் குதூகலமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியமாக ஒவ்வொரு வருடங்களைப் போலவும் இம்முறையும் வான வேடிக்கை மிகவும் கண்ணைக் கவரும் விதத்தில் இருந்தது. பூகோள அமைப்பில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதலில் சூரிய உதயத்தைச் சந்திக்கும் நாடாகும். இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு நியூசிலாந்தில் புத்தாண்டு விடிந்தது.

நியூசிலாந்தை அடுத்து புவியியல் நேர வலயப் படி ஜப்பான் 2 ஆவது நாடாக புத்தாண்டை வரவேற்கின்றது. ஜப்பான் புத்தாண்டை வரவேற்று 3 1/2 மணித்தியாலத்தின் பின் இலங்கை, இந்தியா உட்பட தெற்காசிய நாடுகள் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS