உலகம்
Typography

ஞாயிற்றுக்கிழமை சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவில் உள்ள பாதுகாப்புச் சோதனை சாவடியில் உள்ள வரி செலுத்தும் மையத்தை குறி வைத்து ஒரு டிரக்கில் நிரப்பப் பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 90 ஐத் தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா பாதுகாப்புச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்ட போது வரி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற ஏராளமான மக்கள் உடல் சிதறித் தலத்திலேயே பலியாகி உள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. சோமாலியாவில் தீவிரவாதிகளால் கடந்த 2 ஆண்டுகளில் நடத்தப் பட்ட மிக மோசமான தாக்குதல் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1991 ஆமாண்டு முதல் சோமாலியாவில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் தீவிரவாத அமைப்புத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் பல அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். மேலும் அண்டை நாடான கென்யாவிலும் அல்-ஷபாப் தாக்குதல்களைத் தொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்