உலகம்
Typography

உலக அளவில் முதலில் புத்தாண்டு விடியும் நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் எப்போதும் அத்தினத்தில் பட்டாசுகளும், வான வேடிக்கைகளும் என்று களை கட்டும்.

ஆனால் இம்முறை அங்கு காட்டுத் தீயின் மிகத் தீவிரத்தால் வெப்பநிலை அதிகரித்திருப்பதால் அவுஸ்திரேலியத் தலைநகர் உட்பட முக்கிய நகரங்களில் பட்டாசு வெடிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதனால் அவுஸ்திரேலியக் குடிமக்கள் சோகமடைந்துள்ளனர். காட்டுத் தீயின் தீவிரத்தால் சிட்னியில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. வெப்ப அலைகளாலும், நெருப்பினாலும் நாட்டின் பல பாகங்களிலும் அடர்த்தியான புகை மண்டலம் காணப்படுவதுடன் மூச்சுத் திணறலாலும், வெப்பத்தின் தாக்கத்தாலும் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக் கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். 2019 ஆமாண்டு அவுஸ்திரேலியாவில் பதிவான மொத்தம் 97 காட்டுத் தீ நிகழ்வுகளில் இன்னமும் 43 காட்டுத் தீகளை கட்டுக்குள் கொண்டு வர முடியாது பாதுகாப்புப் படையினர் இன்னமும் போராடி வருகின்றனர்.

எனவே இச்சந்தர்ப்பத்தில் பட்டாசுகள் வெடித்தால் அவை இன்னமும் வெப்பத்தையும், மாசினையும் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் தான் அவற்றை உபயோகிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. மறுபுறம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உர்சுலா என்ற புயலின் தாக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்திருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்