உலகம்
Typography

உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார சக்தியான ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்தும், இறப்பு விகிதம் அதிகரித்தும் உள்ளதால் அந்நாட்டு அரசும், மக்களும் சோகமடைந்துள்ளனர்.

ஜப்பானின் சனத்தொகை இதனால் குறைவடைந்தது மாத்திரமன்றி இந்த ஆண்டு பிறப்பு விகிதம் இன்னும் குறைந்துள்ளது. 1899 ஆமாண்டு முதல் எடுக்கப் பட்டு வந்த கணக்கெடுப்பில் இவ்வருடம் 2019 ஆமாண்டு தான் மிகக் குறைந்தளவு குழந்தைகளாக 864 000 குழந்தைகள் மட்டும் பிறந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 54 000 குழந்தைகள் குறைவாகப் பிறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் கடந்த ஆண்டு இறந்தவர்கள் தொகை அதிகம் என்பதால் சனத்தொகை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜப்பானில் இளம் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதையும், அவர்களைப் பராமரிப்பதையும் சுமையாகக் கருதுவது அதிகமாகும். குடும்பங்களிலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லுவது அங்கு யதார்த்தம் என்பதால் குழந்தையைக் கவனிக்கத் தாய்க்கு நேரம் ஒதுக்கவும் இயல்வதில்லை.

இதனால் இளம்பெண்கள் திருமணம் செய்து கொள்வது கூடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்