உலகம்
Typography

ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் பல ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் பயணித்துத் துல்லியமாக இலக்கைத் தாக்கக் கூடிய உலகின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை குறித்து தனது பெருமிதத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த நவீன ஏவுகணையை எந்த நாடும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், ஹைப்பர்சோனிக் ஆயுதங்களின் பரிசோதனைகளில் நாம் தனித்துவமான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா சமீபத்தில் பரிசோதித்துள்ள ஷிர்கோன் என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது மாக் 9 ஐ விட மேம்பட்டது என்றும் இது சுமார் 7000 மைல்கள் பயணித்தாலும் தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் போது கூட அதன் உயரத்தையோ அல்லது போக்கினையோ கட்டுப்படுத்த முடியும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது ரஷ்யாவை அடுத்து சீனாவும், அமெரிக்காவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பரிசோதிக்கும் திட்டத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS