உலகம்
Typography

மத்திய ஆசிய நாடான கசகஸ்தானில் பெக் ஏர்லைன்ஸை சேர்ந்த ஜெட் விமானம் ஒன்று அல்மட்டி விமான நிலையத்தில் இருந்து தலைநகர் நுர் சுல்தானுக்குப் புறப்பட்டுச் செல்கையில், அருகே இருந்த மாடிக் கட்டடம் ஒன்றுடன் மோதி மோசமான விபத்தைச் சந்தித்துள்ளது.

விமான ஊழியர்கள் அடங்கலாகக் கிட்டத்தட்ட 100 பயணிகளுடன் பயணித்த இவ்விமான விபத்தில் முதற்கட்ட தகவலாக 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் 66 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இந்த விமான விபத்தை அடுத்து இதில் உயிரிழந்தவர்களுக்காக சனிக்கிழமை துக்க தினமாகப் பிரகடனப் படுத்துவதாக கசகஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அரச ஊழியர் ஒருவர் அளித்த தகவலில் விமான விபத்துக்கு ஏதும் கருவி உபகரணம் பழுதானது அல்லது பைலட்டின் தவறு காரணமாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

விமான விபத்து குறித்த விசாரணை உடனே நடைபெறும் என்றும், கசகஸ்தானின் ஏனைய விமான சேவைகள் குறித்த பாதுகாப்பு உறுதி செய்யப் படும் எனவும் கசகஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS