உலகம்
Typography

2015 ஆமாண்டு தொடக்கத்தில் இருந்து ஆப்பிரிக்காவின் மாலி மற்றும் நைஜரின் எல்லையில் உள்ள புர்கினோ பாசோவில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகின்றது.

அண்மையில் வடக்கு புர்கினா பாசோவில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 31 பெண்களும், 4 குழந்தைகளும் உட்பட 35 பொது மக்கள் பலியாகி உள்ளனர்.

சோம் என்ற மாகாணத்தின் அர்பிந்தா நகரில் இராணுவத் தளம் உட்பட 2 இடங்களில் மோட்டார் சைக்கிள்களில் வந்த தீவிரவாதிகள் இந்த மோசமான தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு விமானப் படை உதவியுடன் இராணுவம் தொடுத்த தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். இதில் 7 இராணுவத்தினரும் பலியாகினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அல்கொய்தா அல்லது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது.

மேற்கு ஆப்பிரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்த்தப் பட்ட மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று என புர்கினா பாசோ ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்