உலகம்
Typography

சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் பைலட்டான சரவணன் அய்யாவு என்ற தமிழர் முதன் முறையாக சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணித்த விமானத்தில் தமிழில் பயணிகளுக்கு அறிவிப்புக்களை வழங்கியுள்ளார்.

இந்த அறிவிப்பில் அவர் சென்னை மற்றும் சிங்கப்பூரின் வானிலை எப்படி உள்ளது? எவ்வளவு அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கின்றோம்? எப்போது தரை இறங்குவோம்? போன்ற தகவல்களைப் பதிவு செய்திருந்தார்.

மேலும் இதனை வீடியோ எடுத்துத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார். இந்தப் பதிவுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஸ்கூட் விமான நிறுவனம் தகவல் தருகையில், சரவணன் அய்யாவு சிறந்த தமிழ் படைப்பாளியாக இருக்கும் காரணத்தினால் அவரது கோரிக்கையைத் தாம் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் விமானி சரவணன் அய்யாவு தனிப்பட்ட ரீதியில் கருத்துத் தெரிவிக்கையில், தனக்கு நீண்ட காலமாகவே தமிழில் பயணிகளுக்கு அறிவிப்புக்களை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது ஒரு சிறிய தொடக்கம் தான். ஆனால் உலகளவில் தமிழர்கள் பரந்து வாழும் இந்தியா, இலங்கை, மலேசியா, மொறீசீயஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளில் இவ்வாறு விமானத்தில் தமிழில் அறிவிப்பு வழங்கினால் எவ்வளவு சிறந்ததாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்