உலகம்
Typography

உலகம் முழுதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான இன்று நத்தார் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.

அந்த வகையில் இயேசு கிறிஸ்து பிறந்த நகரான இஸ்ரேல் நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பெத்லகேம் நகரிலும் இன்றைய கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.

பெத்லகேம் நகரில் இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கருதப் படும் மாட்டுத் தொழுவம் அருகே மிகப் பழமையான தேவாலயம் ஒன்று உள்ளது. கி.பி 325-326 ஆமாண்டளவில் இத்தேவாலயம் கட்டமைக்கப் பட்டதாகக் கூறப்படும் இத்தேவாலயம் யுனெஸ்கோ நிறுவனத்தால் பாதுகாக்கப் படும் புராதன இடமாகும். இங்கு இயேசுவைத் தரிசிக்கவும், பிரார்த்தனை செய்யவும் ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான மக்கள் உலகம் முழுதும் இருந்து இங்கு வந்து செல்கின்றனர்.

இன்றைய கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த நேட்டிவிட்டி தேவாலயத்தில் இஸ்ரேல் மக்களும், வெளிநாட்டினரும் இணைந்து சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன், துதிப் பாடல்களைப் பாடி மனமுருகிப் பிரார்த்தனையும் செய்தனர். இந்த வழிபாட்டில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்றுக் கொண்டதும் சிறப்பம்சம் ஆகும்.

நள்ளிரவு 12 மணிக்கு பெத்லகேம் நகரம் முழுதும் கேட்குமாறு மணியோசை ஒலிக்கப் பட்டது. மேலும் நத்தார் பண்டிகை ஒட்டி நன்கு அலங்கரிக்கப் பட்டிருந்த இந்த நகரம் முழுதும் வண்ண மயமான ஒளி விளக்குகளால் ஜொலித்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்