உலகம்
Typography

அவுஸ்திரேலியாவின் வடக்கே பப்புவா நியூகினியா நாட்டின் தீவுகளில் ஒன்று போகன்வில்.

இங்கு சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய பொது வாக்கெடுப்பில் சுதந்திர ஆட்சிக்காக, அத்தீவின் 98% சதவீத குடிமக்கள் ஆதரவாக வாக்குச் செலுத்தியுள்ளனர், இதன் மூலம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலப் போராட்டத்தின் பின்னர் புதிய நாடாக உதயமாகும் வாய்ப்பில் உள்ளது போகன்வில்.

காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று அவுஸ்திரேலியாவிடம் இருந்து 1975 ஆண்டு பப்புவா நியூகினி சுதந்திரம் பெற்ற போதே போகன்வில் தீவும் அவர்களுக்குக் கையளிக்கப் பட்டது. பெருமளவிலான பழங்குடி மக்கள் வாழும் போகன்வில் தீவை 5 வருடங்களுக்குள் அவர்களுக்குத் திருப்பி அளிப்போம் என பப்புவா நியூ கினியா தெரிவித்த போதும் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. தங்கம் மற்றும் தாமிரம் அதிகளவில் காணப்படும் போகன்வில் திவில் உலகின் மிகப்பெரிய திறந்த வெளிச் சுரங்கத்தை பப்புவா நியூகினியா அரசு அமைத்துள்ளது.

பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற போதும் பப்புவா நியூகினி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே முழுமையான பூரண நாடாக போகன்வில் உதயமாக முடியும். இதற்கு இன்னமும் 10 ஆண்டுகள் வரை செல்லலாம் எனக் கருதப் படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்