உலகம்
Typography

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் அண்மையில் நடைபெற்ற 68 ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி டுன்சி மகுடம் சூட்டியுள்ளார்.

கிட்டத்தட்ட 90 அழகிகள் போட்டியிட்ட இந்த நிகழ்வில் இறுதிச் சுற்றுக்கு மெக்ஸிக்கோ, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ, தாய்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 அழகிகள் முன்னேறியிருந்தனர்.

இதன் போது 2019 ஆமாண்டுக்கான பிரபஞ்ச அழகியாக சோசிபினி டுன்சி தேர்வு செய்யப் பட்டார். இவருக்கு முன்னால் உலக அழகி கேட்ரியோனா கிரே மகுடத்தைச் சூட்டினார். சோசிபினி டுன்சியிடம் இன்றைய இளம் பெண்கள் முக்கியமாகக் கற்க வேண்டிய விடயம் என்னவென கேட்கப் பட்ட போது அவர் இவ்வாறு பதில் அளித்தார். 'பெண்கள் எளிதில் அடைய முடியாத பண்பாக தலைமைப் பண்பு உள்ளது. இதற்கு எம்மைத் தயார்ப் படுத்திக் கொள்வதே நாம் கற்க வேண்டிய முக்கிய விடயம்!' என்றார்.

இந்த உலக அழகிப் போட்டியில் 2 ஆம் இடத்தை மெக்சிக்கோவின் சோபியா அராகனும், 3 ஆவது இடத்தைப் ப்ரூட்டோ ரிகோவைச் சேர்ந்த மேடிசனும் பெற்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்