உலகம்
Typography

மிக்ரேஷன் என்ற சர்வதேச நிறுவனம் ஒன்று அண்மையில் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் உலகில் வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கும் மக்களில் முதலிடத்தில் இந்தியர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

உலகில் 17.5 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதில் அதிகமானவர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இந்தியா மட்டுமன்றி உலகில் அமெரிக்காவுக்கு தான் அதிகளவு வெளிநாட்டினர் இடம்பெயர்வதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. இதில் 2/3 பங்கினர் வேலை நிமித்தம் இவ்வாறு இடம்பெயர்கின்றனர்.

கடந்த ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் இருந்து அங்கு வாழும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு 78.6 பில்லியன் டாலர்கள் அனுப்பப் பட்டுள்ளன. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் மெக்ஸிக்கோவில் இருந்து 11.8 மில்லியன் மக்களும் அதற்கடுத்த இடத்தில் சீனாவில் இருந்து 10.7 மில்லியன் மக்களும் வெளிநாடுகளில் அதிகமாக வசிக்கின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்