இந்து சமுத்திரத்தில் உள்ள தீவு நாடான மாலைதீவின் முன்னால் அதிபரான யாமீன் அப்துல் கயூமுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதி மன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
தனது ஆட்சிக் காலத்தின் போது சுமார் 10 இலட்சம் டாலர் பெறுமதியான இலஞ்ச முறைகேடில் ஈடுபட்டதற்காகத் தான் அவர் மீது விசாரணை செய்யப் பட்டுத் தற்போது நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
இந்தத் தீர்ப்பில் வெறும் 5 ஆண்டு சிறைத் தண்டனை மாத்திரமன்றி யாமீன் அப்துல் மீது 50 இலட்சம் டாலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் தெரிய வருகின்றது.
BLOG COMMENTS POWERED BY DISQUS