உலகம்
Typography

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி ஹாங்கொங்கில் பொது மக்களால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.

மறுபுறம் அங்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக ஆதரவுக் கட்சி வெற்றி பெற்றிருந்ததால் சீனாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் ஹாங்கொங்கில் நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் மசோதா அமெரிக்கப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இதற்கு அங்கு அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ஹாங்கொங்கில் மனித உரிமை மீறுவோர் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும், அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கவும் வகை செய்யும் இந்த மசோதாவில் அதிபர் டிரம்ப் கைச்சாத்திட்டார்.

இந்த மசோதா சட்டமானால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்காவுக்குச் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ஹாங்காங் விவகாரம் சீனாவின் உள் விவகாரம் என்றும் இதில் தலையிடுவது சீனா மீது தலையிடுவதற்குச் சமன் என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதுடன் இதற்குப் பதிலடி தர சீனா தயார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்