உலகம்
Typography

புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அல்பேனியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவில் 6.4 இல் தாக்கிய மோசமான நிலநடுக்கத்தின் சிதைவுகளில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஐக் கடந்துள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

அல்பேனியத் தலைநகர் டிரானாவில் இருந்து சுமார் 29 கிலோ மீட்டர் தூரத்தில் சிஜாக் என்ற இடத்துக்கு அருகே 20 கிலோ மீட்டர் ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதுடன் இதனால் கட்டடங்கள் பலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டது. இதன் விளைவால் நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இந்த நிலநடுக்கம் காரணமாக வியாழக்கிழமை அல்பேனியக் கொடியின் தினக் கொண்டாட்டங்களை பிரதமர் எடி ரமா ரத்து செய்து அங்கு துக்க தினத்தைப் பிரகடனம் செய்துள்ளார்.

ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு அல்பேனியா ஆகும். இங்கு தற்போது போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்