உலகம்
Typography

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இந்தியர்களும் இருந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக எடுத்த அதிரடி நடவடிக்கைள் சுற்றி வளைப்புக்களைத் தொடர்ந்து , சரணடைந்திருந்த தீவிரவாதிகளில், இந்தியர்கள் சிலரும் இருந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

சென்ற இரு வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, இதுவரை 900 பேர் சரணடைந்துள்ளதாகவும், அதில் அதிகமானவர்கள் பாகிஸ்தானியர்கள் எனவும், இதில் இந்தியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சிலரும் உள்ளதாகத் தெரிய வந்திருப்பதாகவும் அறியவருகிறது.

சரணடைந்தவர்களை காபூலில் வைத்துத் தனித்தனியாக விசாரிக்கப்படுவதாகவும், தகவல்கள் திரட்டபட்டதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆப்கானிஸ்தான் செய்தித் தகவல்கள் தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்