உலகம்
Typography

2015 ஆமாண்டு மேற்கொள்ளப் பட்ட பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து விலகுவது தொடர்பிலான அதிகாரப்பூர்வ அறிக்கையை அமெரிக்க அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்துள்ளது.

இன்றைய உலகின் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 2015 ஆமாண்டு பிரான்ஸின் போர்கேட் நகரில் 13 நாட்களுக்கு உச்சி மாநாடு இடம்பெற்றது.

மேலும் புவி வெப்ப மயமாதலுக்கு அடிப்படைக் காரணமான 'Green House Effect' என்ற விளைவைக் கட்டுப் படுத்துவது தொடர்பில் 2016 ஆமாண்டு ஏப்பிரல் மாதம் நியூயோர்க்கில் சர்வதேச மாநாடு ஒன்று இடம்பெற்றது. இதன் முடிவில் எட்டப் பட்ட உடன்படிக்கை தான் பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை ஆகும். இதில் உலகின் 56% வீதத்துக்கும் அதிகமான பசுமை குடில் வாயுக்களை வெளியேற்றும் 76 நாடுகள் அடங்கலாகப் பெருமளவிலான நாடுகள் கைச்சாத்திட்டன.

மேலும் கைச்சாத்திட்ட 50% சதவீதத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இதை முறைப்படி ஏற்று முக்கிய ஆவணங்களை ஐ.நா இடம் கையளித்தன. அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி வகித்த போது இணங்கிய இந்த ஒப்பந்தம் நியாயமற்ற முறையில் அமெரிக்காவுக்குப் பெருமளவிலான பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவதால் இனியும் அதில் நீடிக்க முடியாது என கடந்த ஆண்டு டிரம்ப் அறிவித்தார்.

எனவே தான் தற்போது இந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஐ.நா இடம் அமெரிக்கா கையளித்துள்ளது. இந்த விலகல் எப்படியும் ஓராண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் டிரம்ப் அறிவித்திருந்த இந்த முடிவுக்கு பல அமெரிக்கக் குடிமக்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருந்தது. மேலும் வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்