உலகம்
Typography

கடல் நீரின் அளவு வேகமாக அதிகரித்து வருவதாகவும், இது முன்பு கணிக்கப்பெற்றதை விடவும் அதிவேகமாக நிகழ்வதாகவும், பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டி, ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றுக் கொண்ட அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பூமியின் வெப்ப அளவினை 1.5 டிகிரி செல்சியசுக்கு மட்டுப்படுத்துவதும், கரியுமில வாயுவின் அளவை, வரும் 2050-ம் ஆண்டுக்குள் 45 சதவீத அளவுக்கு கட்டுப்படுத்துவதும், மனித குலத்தின் அவசிய தேவையாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவற்றினைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், புவி வெப்ப அதிகரிப்பால் கடல் நீர் மட்டம் உயரும் போது, , இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் எனவும், தாய்லாந்தின் 10 வீத மக்கள் வசிக்கும் பகுதிகள் கடலுக்குள் முற்றாக மூழ்கும் அபயம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்