உலகம்
Typography

வெள்ளிக்கிழமை வடக்கு மாலியின் மேனாகாவில் அமைந்துள்ள இராணுவப் பாசறை ஒன்றின் மீது நடத்தப் பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்கு 53 இராணுவத்தினரும் 1 குடிமகனும் உட்பட 54 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாக்குதலுக்கு ISIS தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இத்தகவலை மாலி அரசு சனிக்கிழமை உறுதி செய்துள்ளது. அண்மைக் காலத்தில் மாலியின் இராணுவத்தினரைக் குறி வைத்து நிகழ்த்தப் பட்ட மிம மோசமான தீவிரவாதத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலை அடுத்து மாலி தலைநகர் பமாகாவில் இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வீதிகளில் இறங்கிப் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை ஏற்படலாம் என அஞ்சப் படுகின்றது. ஜிஹாதிக்களின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இராணுவ வீரர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கப் படுவதில்லை என மாலி அரசை பொது மக்கள் விமரிசித்து வருகின்றனர்.

2012 ஆமாண்டு வடக்கு மாலியின் பகுதிகளை இஸ்லாமியப் போராளிக் குழுக்கள் கைப்பற்றியதில் இருந்து அங்கு இதுபோன்ற தாக்குதல்களும், வன்முறைகளும் மிகவும் அதிகரித்து வருகின்றன. செப்டம்பரில் மத்திய மாலியில் தீவிரவாதக் குழுக்கள் நிகழ்த்திய இதே போன்ற ஒரு தாக்குதலில் 41 துருப்புக்கள் கொல்லப் பட்டும் 20 பேர் காணாமற் போயும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்