உலகம்
Typography

ஹாங்கொங்கில் மிகவும் தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக மேலும் 200 பேரைக் கைது செய்துள்ளனர் ஹாங்கொங் போலிசார்.

சமீபத்தில் ஹாங்கொங் போராட்டக் காரர்கள் அத்துமீறி பாதைகளை வழி மறித்துள்ளனர்.

மேலும் பொதுச் சொத்துக்களைச் சேதப் படுத்தியும் ரயில்வே சப்வே பகுதிகளின் வெளியேறும் வாயில்களைத் தீயிட்டு தடை செய்தும் உள்ளனர். இதனால் ஹாங்கொங் பிரதான ரயில் சேவைகள் இடை நிறுத்தப் பட்டுள்ளன. அதிவேகப் பாதைகள் பல உட்பட பல முக்கிய வீதிகளைப் போராட்டக் காரர்கள் தடுப்பனைகள் போட்டுத் தடைப் பட்டிருந்தனர்.

இதனால் வேறு வழியின்றி போலிசார் போராட்டக் காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பிரயோகித்தும் அவர்களைக் களைத்தனர். செவுங் ஹாங் என்ற ஒரு செல்வந்தரது இருப்பிடம் அருகே போராட்டக் காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கைது நடவடிக்கையின் போது சுமார் 188 பெட்ரோல் குண்டுகளையும், பல பெப்பர் ஸ்ப்ரே மற்றும் தடிகளைக் கைப்பற்றியும் உள்ளனர். 5 மாதங்களுக்கும் மேலாகத் தீவிரமாக ஹாங்கொங்கில் போராட்டம் நடைபெற்று வருவதால் அந்நாட்டின் பொருளாதாரமும், சுற்றுலாத் துறையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்