உலகம்
Typography

தென்சீனக் கடலில் கேந்திர முக்கியத்துவமும் கடல் வளமும் நிறைந்துள்ள பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இதனால் சீனாவுக்கும், ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பல தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகின்றது.

இந்நிலையில் இந்த விவகாரத்தை சுமுகமாகத் தீர்த்து வைக்க ஆசியான் அமைப்பபைச் சேர்ந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளார். அண்மையில் தாய்லாந்து தலைநகர் பாங்கொக் அருகே ஆசியான் மாநாடு இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் உரையாற்றும் போதே சீனப் பிரதமர் லீ கெகியாங் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் தென்சீனக் கடலில் அமைதியும், ஸ்திரத் தன்மையும் நீண்ட காலத்துக்கு நிலவ ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளுடன் பேச்சு வார்த்தைக்குத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

தென் சீனக் கடலின் முக்கிய வர்த்தகப் பகுதிகள் சிலவற்றை சீன மக்கள் குடியரசு, தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

கிட்டத்தட்ட 3.37 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள உலகளாவிய வர்த்தகம் தென்சீனக் கடற்பரப்பில் வருடாந்தம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்