உலகம்
Typography

வியாழக்கிழமை பிலிப்பைன்ஸின் மிண்டனா தீவுப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் தாக்கியது.

இதில் பலத்த சேதம் ஏற்பட்டதுடன் பொது மக்கள் பெரும் பீதியடைந்தனர். கடந்த இரு வாரங்களில் மிண்டனாவை மையமாகக் கொண்டு இது போன்ற 3 நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன.

மேலும் வெள்ளிக்கிழமை காலையும் இதே மிண்டனா தீவுப் பகுதியை மையமாகக் கொண்டு 6.5 ரிக்டர் அளவில் வலிமையான இன்னொரு நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதுவரை இந்த நில நடுக்கங்களில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் போது பல கட்டடங்கள் சேதம் அடைந்ததால் பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் கடைகளில் இருந்து பலர் வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மீளவும் நிலநடுக்கம் தாக்குமோ என்ற அச்சத்திலும் பொது மக்கள் உறைந்துள்ளனர்.

போர்க் கால அடிப்படையில் பிலிப்பைன்ஸ் அரசு மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ள போதும் சேத விபரங்கள் குறித்து முழுமையான தகவல் இன்னும் அங்கிருந்து வெளிவரவில்லை. பசுபிக் சமுத்திரத்தின் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் நிலநடுக்கங்கள் அதிகம் தாக்கும் வளையப் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்