உலகம்
Typography

இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுளள்து. போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஷுக்கு 2018ம் ஆண்டிற்கும், 2019 ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியாவின் பீட்டர் ஹாண்ட்கேவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்பதனால் இவ்வருடம் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசின் 100வது ஆண்டாகும். அதனால் இவ்வாண்டு அப் பரிசினைப் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 223 நபர்களும் 78 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசு அமைப்பின் வலைத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வரும் 16வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க்கிற்கு இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கலாம் எனும் எதிர்பார்ப்பும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்