உலகம்
Typography

பாகிஸ்தானின் நீண்ட கால நட்பு நாடான சீனாவுடன் இந்தியாவின் போட்டி வளர்ச்சியடைந்து கொண்டே வரும் நிலையில், சீனாவுடன் ஸ்திரமான உறவை இந்தியா பேணுவது அவசியம் என பெண்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க அரசு வெளியிட்ட தகவலில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உலகின் பல நாடுகள் இந்தியாவின் பக்கம் இருப்பதால் விசனமடைந்துள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் தொடுக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தோ பசுபிக் பாதுகாப்புத் துறையின் பிரதிச் செயலாளர் ரண்டால் ஷ்ரிவர் கருத்துத் தெரிவிக்கையில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாத மற்றும் ஆயுதப் போராட்ட செயற்பாடுகளை சீனா நிச்சயம் ஆதரிக்கக் கூடாது என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். ஏற்கனவே காஷ்மீர் தவிர்த்து ஏனைய சர்வதேச விவகாரங்களில் சீனா பாகிஸ்தானை ஆதரித்து வந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர் பல்வேறு இந்திய சர்வதேச விவகாரங்களுக்காகத் தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்