உலகம்
Typography

அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து பேசியிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடு திரும்பியவுடன் அதிரடியாக ஐ.நா இன் பாகிஸ்தானுக்கான நிரந்தர உறுப்பினராக செயலாற்றி வந்த மலீஹா லோடி இனைப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

மேலும் ஐ.நாவுக்கான பாகிஸ்தானின் முன்னால் தூதுவராக விளங்கிய முனீர் அக்ரம் என்பவரை 2 ஆவது முறையாக ஐ.நா இற்கான தூதுவராக இம்ரான் கான் நியமித்துள்ளார்.

ஐ.நாவில் உரையாற்றிய போதே பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நியாயப் படுத்தும் விதத்திலும் தடுமாற்றத்துடன் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்த இம்ரான் கான் நாடு திரும்பியவுடன் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். அதாவது பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரியர்கள் தமது உரிமைக்காக ஜிஹாதில் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்தவர்கள் அல் கொய்தா தலைவனான ஒசாமா பின்லேடன் மற்றும் அவருக்கு அடுத்து தலைமைப் பதவியில் இருக்கும் அய்மான் அல் ஷவாஹிரி என்பவர்கள் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்