உலகம்
Typography

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் பாலியல் புகார் ஒன்றில் சிக்கியுள்ளார்.

இவர் மீது இந்தப் புகாரை சுமத்தி இருப்பவர் இங்கிலாந்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் நிருபராகப் பணியாற்றி வரும் சார்லோட் எட்வர்ட்ஸ் என்ற பெண்மணி ஆவார். 1999 ஆமாண்டு போரிஸ் ஜான்சன் பிரபல பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகப் பணியாற்றிய போது ஒரு விருந்து நிகழ்ச்சியில் அவர் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள போரிஸ் ஜான்சன் இது மிகவும் கேவலமாக சித்தரிக்கப் பட்டுள்ள பொய் என்றும் கூறியுள்ளார். ஆனால் சார்லோட் எட்வர்ட்ஸோ தனது டுவிட்டரில், 'பிரதமருக்கு நடந்த சம்பவம் நினைவில் இல்லையெனில் அவருக்கு அதை நான் நினைவூட்டுகின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் முன்னால் பிரதமர் தெரேசா மே பதவி விலகியதை அடுத்துப் பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சன் கூட இந்த விவகாரத்தை சாமர்த்தியமாக கையாளாது விட்டால் அவரின் பதவியும் கேள்விக்குறியே என்ற நிலை இருந்து வருகின்றது. இந்நிலையில் அவர் மீது அடுக்கடுக்காக முன்பு இலண்டன் மேயராக இருந்த போது ஒரு ஊழல் குற்றச்சாட்டும், அதைத் தொடர்ந்து இப்போது பாலியல் குற்றச் சாட்டும் சுமத்தப் பட்டிருப்பது இங்கிலாந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்