உலகம்
Typography

சோமாலியாவின் தெற்கே ஷபேல் பகுதியில் உள்ள பாலேடோக்லே விமான நிலையத்தில் பல குண்டுவெடிப்புக்களும், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் அண்மையில் அரங்கேறியுள்ளன.

இதனைத் தொடர்ந்து சோமாலியாவில் அமெரிக்கப் படையினர் பயிற்சி எடுத்து வரும் ஒரு ராணுவ முகாம் மீதும் ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல்களுக்கு சோமாலியாவில் இயங்கி வரும் அல் ஷபாப் என்ற போராளிக் குழு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக கார் குண்டுத் தாக்குதல் மூலம் இராணுவ முகாமின் கதவுகளைத் தகர்த்து அதன் பின் தனது போராளிகளை உள்ளே அனுப்பி தாக்குதலை நடத்தியதாக அக்குழு தெரிவித்துள்ளது. இந்த இராணுவப் பாசறை மிகவும் பலம் வாய்ந்த ஒன்று என்று தெரிவிக்கப் படுவதுடன், தற்போது குறித்த பகுதியில் இருந்து ஜிஹாதி கிளர்ச்சியாளர்கள் அப்புறப்படுத்தப் பட்டதாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சோமாலியாவின் தலைநகர் மொகதிசுவில் இருந்து மேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இராணுவ முகாம் அமைந்துள்ளது. இங்கு அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினர், சோமாலிய படையினர் மற்றும் உகண்டா அமைதிப் படையினர் ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர். வெறும் பயிற்சி முகாமாக மாத்திரமன்றி டிரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தும் தளமாகவும் இந்த பாசறை பயன்படுத்தப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்