உலகம்
Typography

பனிப்போர் முடிந்த பின் 1987 ஆமாண்டு அமெரிக்காவும் ரஷ்யாவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க அணுவாயுத ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன.

இதன் படி இரு நாடுகளும் 500 முதல் 5500 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை இனிப் பரிசோதிப்பதில்லை என முடிவெடுத்தன. ஆனால் கடந்த வாரம் நூறு வீதம் உறுதிப் படுத்தப் படாத அணு ஏவுகணை ஒன்றினை ரஷ்யா பரிசோதித்துள்ளது.

தோல்வியில் முடிந்த இந்த சோதனையில் 7 பேர் பலியானதாகவும் தகவல் வெளியானது. இதை அடுத்து கடும் கோபமடைந்த அமெரிக்கா ரஷ்யாவுக்கும் தனக்கும் இடையே இருந்த 32 வருட அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தது. மேலும் திங்கட்கிழமை 500 கிலோ மீட்டருக்கு அதிகமாகச் சென்று தாக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையையும் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

அமெரிக்காவிடம் உள்ள ஏவுகணைகளால் 5800 Km தூரம் வரை சென்று தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பதிலடி சோதனை ரஷ்ய அமெரிக்க நாடுகளுக்கிடையே இராஜதந்திர நெருக்கடியை அதிகரித்துள்ளதும் நோக்கத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS