உலகம்
Typography

ஆப்கான் தலைநகர் காபூலில் திருமண நிகழ்வொன்றின் போது திடீரென இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலில் 63 பேர் பலியானதாகவும் 180 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சனி இரவு 10:40 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த மோசமான தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத போதும் ஆப்கானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான்கள் இதன் பின்னணியில் இருக்கலாம் எனப் பரவலாக சந்தேகிக்கப் படுகின்றது.

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலில் தலிபான் முன்னணித் தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாதாவின் சகோதரர் கொல்லப் பட்டிருந்தார்.

ஆப்கானில் இன்னமும் ஆயிரக் கணக்கான அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்