உலகம்
Typography

உலகின் மிகப் பெரிய அணுவாயுத விபத்து முன்னால் சோவியத் யூனியனும் உக்ரைனில் உள்ளதுமான செர்னோபில் என்ற இடத்தில் 1986 ஆமாண்டு நிகழ்ந்தது பற்றி நிச்சயம் அனைவரும் அறிந்திருப்பர்.

இந்நிலையில் கடந்த வாரம் ரஷ்யாவில் அணுக் கதிர் விபத்து ஒன்று இனம் காணப் பட்டுள்ளதுடன் இது அணுவாயுத சோதனை மூலம் தான் நிகழ்ந்திருக்கும் என அமெரிக்கா குற்றமும் சாட்டியுள்ளது.

மேலும் இந்த அனர்த்தத்தை அடுத்து சர்வதேசம் சற்று அதிர்ச்சியடைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஆர்க்டிக் கடற்பரப்பில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே உள்ள வைட்-சி என்ற இடத்தில் அணு மின்னணு நிலையம் அருகே பெரிய விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பில் ரஷ்ய அணுசக்தி மையம் அந்த மின்னணு நிலையத்தில் செய்யப் பட்ட சோதனை ஒன்று தவறானதால் தான் இந்த சிறிய விபத்து ஏற்பட்டது என்றும் இதனால் சிறியளவு கதிர்வீச்சுப் பாதிப்பு தான் என்றும் கூறியுள்ளது. மேலும் மக்களை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் உள்துறை அமைச்சு செய்மதிப் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு இது அணு உலை விபத்தல்ல என்றும் உண்மையில் ஏவுகணை எஞ்சின் வெடிப்பு என்றும் இதில் 5 ரஷ்ய விஞ்ஞானிகள் பலியானார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வெடிப்புக்குப் பின் சில நிமிடங்களுக்குள் 40 நிமிடங்களுக்கு அணுக் கதிர் வீச்சு சியவரோவின்ஸ்க் பகுதியில் அதிகரித்துள்ளது. இப்பகுதியும் விபத்து ஏற்பட்ட வைட் கடல் பகுதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது.

ஆனால் இந்த விபத்தானது செர்னோபில் விபத்து போன்று பொது மக்களைப் பாதித்து கதிர்வீச்சு நோய்களை ஏற்படுத்தும் அளவுக்குப் பாரிய அணுக் கதிர்வீச்சுக் கசிவை வெளிப் படுத்தவில்லை என பொது மக்கள் தரப்பாலும் தெரிவிக்கப் பட்டதாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS