உலகம்
Typography

ரஷ்யாவில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அடக்க போர்க்கால அடிப்படையில் ஆயிரக் கணக்கான தீயணைப்பு வீரர்களுடன் இராணுவமும் ஈடுபட்டு வருகின்றது.

ரஷ்யாவின் க்ராஸ் நோயார்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள காடுகளில் தான் திடீரென இத்தீ ஏற்பட்டு பின்னர் மளமளவெனப் பரவி வருகின்றது.

இதனால் சுமார் 10 இலட்சம் ஹெக்டேருக்கு அதிகமான நிலப் பரப்பினை காட்டுத் தீ அழித்துள்ளது. மிகத் தீவிரமான தீச் சுவாலைகளை ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்கும் பணியும் இடம்பெற்று வருகின்றது. சென்ற வாரம் இதே பகுதியில் 20 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத் தீயால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்