உலகம்
Typography

மும்பைத் தாக்குதல் சூத்திரதாரியான ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப் பட்டுள்ளதாக உறுதிப் படுத்தப் படாத செய்தி வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப் பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டு அது இரு பகுதிகளாகப் பிளவு பட்டதை அடுத்த சூழலில் இந்த ஹபீஸ் சயீதின் விடுதலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2008 ஆமாண்டு மும்பை தீவிரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியான ஹபீஸ் சயீதினை கைது செய்து சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்தால் குறித்த தீவிரவாதியையும் அவனது குழு உறுப்பினர்கள் சிலரையும் ஜூலை 17 ஆம் திகதி பாகிஸ்தான் அரசு கைது செய்தது. ஹபீஸ் சயீது மற்றும் அவனின் அமைப்பைச் சேர்ந்த 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலிலும் வைக்கப் பட்டனர். மேலும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்குள் ஹபீஸ் சயீது மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப் பட்டது.

இந்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து தீவிரவாதி ஹபீஸ் சயீது விடுதலை செய்யப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்