உலகம்
Typography

இரு வாரங்களில் அதாவது கிட்டத்தட்ட 12 நாட்களில் வடகொரியா 4 ஆவது முறையாக ஏவுகணைப் பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அடையாளம் தெரியாத இரு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளது. தென் ஹ்வாங்ஹே மாகாணத்தின் கிழக்கே உள்ள கடற் பகுதிக்கு இந்த ஏவுகணி ஏவப் பட்டுள்ளதாக அடையாளம் காணப் பட்டுள்ளது.

இது தொடர்பில் தற்போதைய நிலையைக் கண்காணித்து வருவதாகவும் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அமெரிக்காவும், தென்கொரியாவும் மேற்கொண்ட கூட்டு இராணுவப் பயிற்சிக்குத் தனது கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளும் முகமாகவே வடகொரியா இந்த ஏவுகணைப் பரிசோதனையை நிகழ்த்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வருடம் அமெரிக்க, தென்கொரிய கூட்டு இராணுவப் பயிற்சி அவ்வளவு தீவிரம் இல்லை என்றாலும் இது தொடர்பில் டிரம்ப் மற்றும் தென்கொரியத் தலைவர் மூன் ஜே இன் உடன் எட்டப் பட்ட ஒப்பந்தங்களை அவை மீறுவதாக வடகொரியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்