உலகம்
Typography

ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி அங்கு விசாரணையை மேற்கொள்ள ஏதுவான விதத்தில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் அண்மையில் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் மாதம் ஹாங்காங்கில் போராட்டம் தொடங்கியது.

இந்தப் போராட்டத்தில் இலட்சக் கணக்கான மக்கள் ஒன்று திரண்டு வலுப்பெற்றதால் தனது நிலையில் இருந்து இறங்கி வந்த ஹாங்காங் நிர்வாகம் இந்த சட்ட சீர்திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. ஆனாலும் சமரசம் ஆகாத மக்கள் மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வார இறுதி நாட்களில் இலட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் பேரணி நடத்தில் அரச அலுவலகங்கள் மற்றும் போலிஸ் நிலையங்களை முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன் போது போராட்டக் காரர்கள் மற்றும் போலிசாருக்கு இடையில் வன்முறையும் வெடித்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் சாலை, ரயில் மற்றும் விமானம் போன்ற அனைத்து சேவைகளையும் போராட்டக் காரர்கள் முற்றுகையிட்டு அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. 230 பயணிகள் விமானங்களது பயணம் ரத்து செய்யப் பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் அரச ஊழியர்கள், ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுனர்கள் எனப் பல தரப்பினர் கை கோர்த்து சுமார் 5 இலட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்