உலகம்
Typography

பூகோள வெப்பமயமாதலில் முக்கிய விளைவுகளில் ஒன்று தான் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் பாரியளவில் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்தல் ஆகும்.

இந்நிலையில் வடதுருவத்துக்கு அண்மையில் மனிதர்கள் மிகவும் சொற்பமாக வாழும் டென்மார்க்குக்குச் சொந்தமான தீவுப் பகுதியான கிறீலாந்தில் இந்த விளைவு எண்ணிப் பார்க்க முடியாததாக உள்ளது என நாசா கவலை தெரிவித்துள்ளது.

அதாவது கிறீலாந்தில் செய்மதி மூலமான அண்மைய அவதானம் ஒன்றின் படி அங்கிருக்கும் பனிப்பாறைகளில் 24 மணித்தியாலத்தில் 1100 கோடி டன் அளவு உருகி நீர்மட்டம் அதிகமாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து பனிப்பாறைகள் உருகி பில்லியன் டன்கள் நீர் அத்திலாந்திக் கடலில் கலந்து வந்தால் நீர்மட்டம் கடுமையாக உயர்வடைய வாய்ப்பு உள்ளது என நாசா தெரிவித்துள்ளது. இவ்வாறு கடல் நீர் மட்டம் அதிகரித்தால் உலகில் பாரியளவில் சுனாமி போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு சிறு தீவுகள் முற்றாக அழியவும், கடற்கரையோரமாக இருக்கும் உலகின் முக்கிய நகரங்கள் பேரழிவைச் சந்திக்கவும் நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்