உலகம்
Typography

கிழக்கு இந்தோனேசியாவை நேற்றுத் தாக்கிய 7.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் இருவர் பலியாகி உள்ளனர்.

2000 இற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். பல வீடுகள் இடிந்துள்ளன. 65 முறை சிறிய அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.மாலுக்கு தீவுகலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் போது சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப் படவில்லை.

இதேவேளை நேபாளம் மற்றும் இந்தியாவின் அசாம் மாநிலம் ஆகியவை கடும் மழை, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளை சந்தித்துள்ளன. நேபாளத்தில் கடந்த 5 நாட்களாகப் பெய்து வரும் கன மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி 67 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் காணாமற் போயுள்ளனர். ஆயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 16 000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்த வாரம் பெய்த மழை மாத்திரம் மாதாந்த சராசரி மழை வீழ்ச்சியை விட அதிகம் எனக் கணிக்கப் பட்டுள்ளது.

மீட்புப் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப் பட்டுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை வரை கனமழை இருக்கும் என அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் தரை வழியாகவோ, வான் வழியாகவோ பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மறுபுறம் அசாம் மாநிலத்தில் பருவ மழை காரணமாக 3182 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 28 மாவட்டங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 26 1/2 இலட்சம் மக்கள் பாதிக்கப் பட்டும் உள்ளதாக மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழு தகவல் அளித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்