உலகம்
Typography

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை சவுதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதன்போது அவர் ஈரானுடனான அரசியல் பதற்றம் மற்றும் அதனால் உலகளவில் அதிகரித்துள்ள எண்ணெய் விலை என்பவை தொடர்பிலேயே முக்கியமாகப் பேசியுள்ளார்.

மேலும் மத்திய கிழக்கில் ஸ்திரத் தன்மையை நிறுவுவதில் சவுதியின் பங்களிப்பு தொடர்பிலும் ஈரானின் அச்சுறுத்தலை எவ்வாறு இரு நாடுகளும் சேர்ந்து எதிர்கொள்வது என்பது தொடர்பிலும் டிரம்ப் பேசியுள்ளார். ஈரானின் வான் பரப்புக்கு அருகே அமெரிக்க டிரோன் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதை அடுத்து அதன் மீது தாக்குதல் தொடுக்கும் முடிவில் இருந்த டிரம்ப் கடைசி நேரத்தில் அந்த முடிவைக் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இத்தொலைபேசி உரையாடலின் போது சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் கொலையில் முகமது பின் சல்மானுக்கு இருந்த தொடர்பு குறித்த நேர்மையான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் அழுத்தம் தெரிவித்தாரா என வெள்ளை மாளிகை தகவல் வெளியிடவில்லை.

இவ்விவகாரத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் ஐ.நா ஆல் வெளியிடப் பட்ட 100 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் ஜமால் கசோக்கியின் கொடூரமான கொலை தொடர்பில் சவுதி முடிக்குரிய இளவரசர் மீது முறையான விசாரணை நடாத்தப் பட வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்