உலகம்
Typography

செவ்வாய்க்கிழமை பப்புவா நியூகினியாவை 7.5 ரிக்டர் அளவு கொண்ட வலிமையான நிலநடுக்கம் 10 Km ஆழத்தில் கோக்கோப்போ இலிருந்து 44 Km வடகிழக்கே தாக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து அருகே உள்ள சாலமன் தீவுகள் பகுதிக்கு உடனே சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டது.

இந்த நிலநடுக்கம் அளவில் பெரிதாக இருந்தாலும் இது அதிகளவு பாதிப்பை பூமியின் மேற்பரப்பில் ஏற்படுத்தாது எனவும் USGS அறிவித்துள்ளது. இந்தோனேசியாவுக்குக் கிழக்கே பசுபிக் சமுத்திரத்தின் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் வலயத்தில் அமைந்துள்ள குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு பப்புவா நியூகினியா ஆகும். இங்கு இன்று தாக்கிய பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் அல்லது உயிரிழப்புக்கள் குறித்து உடனடித் தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

2018 பெப்ரவரியில் இதே போன்று பப்புவா நியூகினியாவைத் தாக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகியும், பல கோடி பெறுமதியான பொருட் சேதமும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்