உலகம்
Typography

நிலவில் கால் பதிக்கும் முதற் பெண்மணி அமெரிக்கராகத் தான் இருப்பார் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நிலவில் முதல் கால் பதித்த ஆண் அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ரோங் என்பது குறிப்பிடத்தக்கது.

105 நாடுகளில் இருந்து 15 000 விஞ்ஞானிகள் பங்கேற்ற சாட்டிலைட் 2019 என்ற மாநாடு வாஷிங்டனில் தொடங்கியுள்ளது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே மைக் பென்ஸ் இந்த நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மீளவும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பவும் அதன் பின் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்