உலகம்
Typography

தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமிபியாவில் கடும் பஞ்சம் காரணமாக அவசர காலச் சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது.

அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இச்சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. சுமார் 25 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நமிபியா தனி நபர் வருமானம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடாகும்.

இங்கு பருவ மழையும் பொய்த்துப் போய் கடும் பஞ்சம் நிலவுகின்றது. இதனால் பஞ்சம் மற்றும் பட்டினியால் தவிக்கும் பொது மக்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டும் பருவ மழை பெய்யாத சூழலில் தான் நிவாரணப் பணிகளை சர்வதேசத்திடம் இருந்து எதிர்பார்க்கும் நமிபியாவில் அவசரநிலைச் சட்டத்தை அந்நாட்டு அதிபர் ஹகே ஜிய்ன்கோப் பிரகடனப் படுத்தியுள்ளார்.

இது தவிர நமிபியாவில் கால்நடைகளும் பஞ்சத்தால் பெருமளவு உயிரிழந்து வருகின்றன. இதனால் கால்நடைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் தொடர்பாக விரிவான கணக்கெடுப்பினை நடத்துமாறும் அதிபர் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்