உலகம்
Typography

மாஸ்கோவின் ஷெர்மெட்யேவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முர்மான்க்ஸ் என்ற நகரத்துக்கு 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் பயணித்த சுகோய் சூப்பர் ஜெட் 100 ரக விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டது.

இதனால் ஷெர்மெட்யேவ் விமான நிலையத்துக்கே குறித்த விமானம் அவசரமாகத் திருப்பப் பட்டது.

தரையிறங்கிய போது தீப்பிடித்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் வேகமாகச் சென்று விபத்தில் சிக்கியது. விமானத்தின் பாதியளவுக்கு தீ சூழ்ந்து விட்டது. கடும் போராட்டத்துக்குப் பின் விமானி விமானத்தை நிறுத்தியதை அடுத்து விமானத்தின் முன்பகுதியில் உள்ள அவசர வழி மூலம் பயணிகள் வெளியேற்றப் பட்டனர். ஆனால் தீ தீவிரமாக உடனே பரவி விட்டதால் 2 குழந்தைகள், 2 விமான ஊழியர்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

உயிர் தப்பிய 37 பேரில் 11 பேருக்கு சாதாரண எரி காயங்கள் ஏற்பட்டுள்ளன. மின்னல் தாக்கியதால் தான் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க வேண்டி ஏற்பட்டதாகவும் ஆனாலும் விமானத்தில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு விட்டதாகவும் விமானி விளக்கம் அளித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்