உலகம்
Typography

அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வரிசையில் 5 ஆவது நாடாக நிலவில் விண்கலம் ஒன்றை இறக்கும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதனால் இஸ்ரேல் மக்கள் சோகமடைந்துள்ளனர். இஸ்ரேல் அனுப்பிய பெரஷீட் என்ற விண்கலம் பெப்ரவரியில் விண்ணுக்குச் செலுத்தப் பட்டு 2 மாதங்களாகப் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் அண்மையில் நிலவின் சுற்றுவட்டப் பாதயை அடைந்து அங்கு தரையிறங்க முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாகத் தரையுடன் மோதி வெடித்துச் சிதறியுள்ளது.

இதனால் கடந்த 48 வருடங்களில் முதன் முறையாக நிலவில் விண்கலம் ஒன்று மோதி வெடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் நாசாவின் கியூரியோசிட்டி விண்கலம் முதன் முறையாக அங்கு நிலத்தடி பாறை ஒன்றைத் துளையிட்டு அதன் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்துள்ளதுசெவ்வாயில் தரையிறங்கி 2244 பூமி நாட்களுக்குப் பிறகு அண்மையில் ஏப்பிரல் 6 ஆம் திகதி இச்சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளது. ஷார்ப் மலைப் பகுதியில் களிமண் பிரிவு என்ற இடத்தில் இவ்வாறு துளையிடப் பட்டுள்ளது.

இந்தப் பாறை மாதிரிகளை ஆராய்ந்தால் செவ்வாயில் நிலத்தடியில் நீர் உள்ளதா என்பது குறித்து அறிய முடியும் என்பதால் இவ்வாய்வில் நாசா விஞ்ஞானிகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்