உலகம்
Typography

உலகின் மிகப்பெரிய இறக்கை கொண்ட பாரிய  விமானம் தனது வெள்ளோட்டத்தை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் லாஷ் ஏஞ்சல்ஸில் தயாரிக்கப் பட்ட 6 எஞ்சின்கள் கொண்ட இந்த விமானம் ஒரு கால் பந்து மைதானத்தின் அளவு நீண்டு அகன்ற இறக்கைகளும் இரு பயணிகள் தொகுதியும் கொண்டதாகும்.

கலிபோர்னியா மாநிலத்தின் மோஜாவே விமான மற்றும் விண்வெளி நிலையத்தில் இருந்து செலுத்தப் பட்ட இவ்விமானம் 2 1/2 மணிநேரம் மோஜாவே பாலைவனத்தில் வெற்றிகரமாகத் தனது வெள்ளோட்டத்தை மேற்கொண்டுள்ளது. 50 இலட்சம் பவுண்ட்ஸ் எடை கொண்ட இவ்விமானம் 385 அடி அகலம் மற்றும் 238 அடி நீளம் கொண்டதாகும்.

இந்த விமானத்தை ஸ்டிராட்டோலாஞ் என்ற விமானத் தயாரிப்பு நிறுவனம் பல வருடங்களாகத் தயாரித்து வந்தது. இந்நிறுவனத்தின் தாபகரான பால் ஆலென் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பில்கேட்ஸ் உடன் இணைந்து 1975 இல் ஆரம்பித்தவர் ஆவார்.

2018 ஆக்டோபரில் பால் ஆலென் காலாமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்