உலகம்
Typography

திங்கட்கிழமை நல்லிணக்க அடிப்படையில் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து 100 இந்திய மீனவர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் அனைவரும் எல்லையைத் தாண்டி இந்தியாவை வந்தடைந்து விட்டதாக இஸ்லாமாபாத் இலுள்ள இந்தியத் தூதரகம் உறுதிப் படுத்தியுள்ளது. கைது செய்யப் பட்ட இந்த 100 மீனவர்களும் அரேபியன் கடலில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப் பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

விடுவிக்க பட்ட மீனவர்கள் அனைவரும் உடனடியாக இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். முன்னதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் மொஹம்மட் ஃபைசல் கருத்துத் தெரிவிக்கும் போது ஏப்பிரலில் 5 பொது மக்களும் 355 மீனவர்களும் அடங்கலாக சுமார் 360 இந்தியக் கைதிகளை விடுவிக்கப் போவதாகத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்