உலகம்
Typography

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென பதவி விலகி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் வேண்டுகோளுக்கு அமைய மெக்ஸிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், குடும்பமாக வரும் அகதிகளைப் பிரித்து அடைப்பது போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்களை அமுல் படுத்திய அமைச்சர் இவர் ஆவார்.

இருந்த போதும் அகதிகள் விவகாரத்தில் கடுமை காட்டியது போதாது என இவர் மீது டிரம்ப் அதிருப்தியை வெளிக்காட்டி வந்தார். இந்நிலையில் தான் திங்கட்கிழமை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நீல்சென், தான் பதவி துறக்க இதுதான் சரியான தருணம் எனத் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீல்செனின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அதிபர் டிரம்ப் தற்காலிக உள்துறை அமைச்சராக சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு கமிஷனர் கெவின் மெக்லீயன் பொறுப்பு வகிப்பார் என்று அறிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்