உலகம்
Typography

திங்கட்கிழமை காலை 8:02 மணிக்கு தைவானின் கவுசிங் என்ற நகரிலிருந்து 317 பயணிகளுடன் ஹாங்கொங் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் அவசர அவசரமாக புறப்பட்ட இடத்துக்கே திருப்பி செலுத்தப் பட்டு தைவானில் தரையிறக்கப் பட்டுள்ளது.

இதற்குக் காரணமாக விமானத்தின் குறித்த ஒரு எஞ்சினில் இருந்து புகை வெளியானமை கூறப்ப்பட்டுள்ளது.

விமானம் தரையிறக்கப் பட்ட பின் பயணிகள் யாவரும் பத்திரமாக வெளியேற்றப் பட்டனர். விமானத்தின் எஞ்சினில் பறவை மோதியதால் புகை வந்திருக்கலாம் எனத் தற்போது சந்தேகிக்கப் படுகின்றது. தற்போது இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த விமானம் ஹாங்கொங்கின் கதைய் டிரகன் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்