உலகம்
Typography

மாலைத் தீவில் இருந்து நாடு கடத்தப் பட்ட முன்னால் அதிபரான முகமது நஷீத் அங்கு அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளார்.

மிக நீண்ட காலமாக இராணுவ ஆட்சி இடம்பெற்று வந்த மாலைத் தீவில் 2008 ஆமாண்டு அவ்வாட்சி முடிவுக்கு வந்த போது மாலைத் தீவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 1 வயதான முகமது நஷீத் வெற்றி பெற்று அதிபரானார்.

ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்கள், இராணுவ நெருக்கடி போன்ற காரணங்களால் பதவிக் காலம் முடியும் முன்பே 2012 இல் நஷீத் ராஜினாமா செய்ததுடன் 2013 தேர்தலில் வெற்றி பெற்ற முற்போக்குக் கட்சியின் தலைவர் அப்துல்லா யாமீன் வெற்றி பெற்று அதிபருமானார். அப்துல் யாமீனின் ஆட்சிக் காலத்தில் தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னால் அதிபராகக் கடமையாற்றிய முகமது நஷீத் நாட்டை விட்டு பலாத்காரமாக வெளியேற்றப் பட்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு 2018 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் ஜனநாயகக் கட்சி சார்பில் முகமது சோலி அபார வெற்றி பெற்று அதிபரானார். இதையடுத்து ஆபத்து நீங்கியதால் நஷீத் மீண்டும் நாடு திரும்பினார். சில தினங்களுக்கு முன்பு 87 தொகுதிகளைக் கொண்ட மாலைத் தீவின் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் மாலைத் தீவு ஜனநாயகக் கட்சி 2/3 பங்கு இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை வெற்றி ஈட்டியது. இதன் மூலம் மாலைத் தீவில் மறுபடியும் ஜனநாயகம் திரும்பியிருப்பதாக முகமது நஷீத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்