உலகம்
Typography

ஈரானின் புரட்சிகர இராணுவத்தை ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்த அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்து வரும் நிலையில் இது தொடர்பில் ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்கு 3 அமெரிக்க அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

அதில் வாஷிங்டன் ஆனது முதன் முறையாக இன்னொரு நாட்டின் இராணுவத்தை தீவிரவாதக் குழுவாக அடையாளப் படுத்த அதிகாரப் பூர்வமாக முயன்று வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்குப் பதிலடியாக சனிக்கிழமை ஈரானின் மூத்த சட்ட வல்லுனர் ஒருவர் அளித்த தகவலில் ஈரானின் புரட்சிகரப் படையைத் தீவிரவாதிகளாக வாஷிங்டன் பிரகடனப் படுத்தினால் ஈரானும் சற்றும் தயக்கம் இன்றி அமெரிக்க இராணுவத்தை தீவிரவாதப் பட்டியலில் அதாவது கருப்புப் பட்டியலில் இட நேரிடும் என எச்சரித்துள்ளார்.

இது தவிர அமெரிக்கா மெத்தனமாக நடந்து கொண்டால் இஸ்லாமிய தேசப் போராளிகளுக்குப் பிறகு அமெரிக்க இராணுவத்தைத் தான் தீவிரவாதப் பட்டியலில் இட நேரிடும் என ஈரானியப் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் ஹெஸ்மதொல்லாஹ் ஃபலஹட்பிசெஹ்ஹ் டுவிட்டரில் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்